Wednesday, 16 January 2019

ஒரு இனிய கனவு !!! Dream Comes True -- I am at Bonelli !!!

எங்கெங்கு காணினும் டெக்ஸ்... மிலன் நகரம் ஒரு அருமையான நகரம். டெக்ஸ் வில்லர் 70 வருட டெக்ஸ் கொண்டாட்டத்தில் பங்கு கொள்வது எவ்வளவு மகிழ்ச்சி.





எனது பயணம் முனிச் மாநகரத்தில் ஆரம்பித்து மிலன் வந்தடைந்த பொது ஒரே இன்ப அதிர்ச்சி, பனி பொழியும் முனிச் வானிலை போல் இல்லாமல், மிலன் நகரம் மிகவும் வெப்பமாக நன்றாக இருந்தது...



எனது முதல் பயணம் போனெல்லி எடிட்டர் அலுவலகத்திற்கு, அவர்களுக்கு கால் செய்ய மறுமுனையில் ஒரு டெக்ஸ் நண்பர் வருக நண்பரே இந்தியாவில் இருந்து வரும் டெக்ஸ் பேன் உங்களை வரவேற்க மிக்க மகிழ்ச்சி என்றார்.


ராபர்டோ என்னை எடிட்டர் ஆபீஸ் முழுவதும் சுற்றி காட்டினார், அங்கு texting work இல் இருந்த போசெல்லி அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது 


எனது ரேஞ்சர் பேட்ஜ் பார்த்ததும், 1970சில் வெளிவந்த டெக்ஸ் வில்லர் விண்செஸ்டெர் ஒன்றை என்னிடம் தந்தனர். ஒரே குதூகலம் தான்... 



அது ஒரு சொர்க்கலோகம்... எங்கு திரும்பினாலும் டெக்ஸ்.



ஒரு சிறிய வீடியோ பதிவு உங்களுக்காக....