Monday, 4 December 2017

டிராகன் நகரம் - டெக்ஸ் வில்லர் Pleasant Memories...

நான் அப்போது ஒரு 10 வயது சிறுவன்...

அப்பா அந்த புக் வேணும்பானு என் தந்தையிடம் கேட்டு வாங்கிய புத்தகம்...


 5 ரூபாய் குண்டு புக் எனக்கும் டெக்ஸ்க்கும் உண்டான பந்தம்...



விஜயன் சார் நன்றிகள் கோடி!!!

 

அருமையான மறுபதிப்பு அதுவும் முழு வண்ணத்தில்...

மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகள்...


இன்று எனது தந்தை என்னுடன் இல்லாமல் போன தருணத்தில் அவர் ரசித்த முத்து லயன் மற்றும் wild west கதைகளில் நான் பின்னோக்கி செல்கிறேன் எனது நினைவுகளில்....

டிராகன் நகரம் அதுவும் வண்ணத்தில், அதுவும் உலக தரத்தில்... அசத்திட்டிர்...

டிராகன் நகரம் கதை பற்றிய சிறப்பு பதிவு மிக விரைவில்.... 

உங்கள் டெக்ஸ் பேன்...


Saturday, 14 January 2017

மீண்டும் ஒரு புதையல் - முத்து 45

2006 June 15, சரியாக ஞாபகம் ஒரு வலைத்தளத்தில் டுரங்கோ பற்றி பார்த்தேன்.




உடனடியாக எனது தேடல் துவங்கியது அதன் அணைத்து பிரெஞ் மொழி பிரதிகளையும் வாங்கினேன் மொழி புரியாமல் படம் பார்த்தேன் மிகவும் ஏக்கத்துடன் இதனை யாரேனும் மொழி பெயர்க்க கூடாதா எனும் ஏக்கம்.

இன்று நமது முத்து காமிக்ஸ் வடிவில் கனவு பலித்தது.




ஒரே முச்சில் முழு புத்தகத்தையும் படித்து முடித்தேன்.

சிறப்பு மிக சிறப்பு !!!


இவரது கதையும் நமது ஹீரோக்கள் லிஸ்டில் மிக சிறந்த இடம் கண்டிப்பாக உண்டு...

மற்ற பாகன்களுக்காக காத்திருக்கிறேன.

மிக வருடங்களுக்கு பிறகு ஒரு சிறந்த காமிக்ஸ் படித்த நிறைவு.

மற்றும் இந்த புத்தக கண்காட்சியில் ஒரு பெரிய புதையலே கிடைத்தது...







நான் சில காலமாக எந்த புத்தகமும் வாங்க வில்லை என்பது தான் உண்மை.

வாங்கினாலும் படிக்கவில்லை, தற்போது நான் அடைந்தது மட்டற்ற மகிழ்ச்சி..........

நான் ரசித்த கிளின்ட் ஈஸ்ட் வூட் படங்கள் பார்ப்பது போன்ற ஒரு உணர்வு...



மற்றும் ஒரே நாளில் 6 டெக்ஸ் கதைகள் படிப்பதும் ஒரு பேரு....

இவை அனைத்தும் ஒரு வித  மெய்சிலிர்க்கும் அனுபவம் என்றால் நான் எனது nostalgic feeling திரும்பியது இயந்தர தலை மனிதர்களை மீண்டும் கண்டவுடன்...



இவை மட்டுமா இந்த பட்டியலில் நம்ம லக்கி லுக் வேற !!!



இன்று....






My Reading Continues............