எனது சந்தோஷ அளவினை சொல்ல முடியவில்லை...
மின்னும் மரணம் எனும் கதையினை நான் இதுவரை முழுவதுமாக தமிழில் படித்ததில்லை ...
கேப்டன் டைகர் எனும் கதாபாத்திரத்தை Lt Mike Blueberry என்று ஆங்கிலத்தில் படித்து தெரியாமல் ஒரு நாள் அந்த இரு புத்தகங்களையும் (மின்னும் மரணம் 10 பாகம்) படிக்க ஆரம்பித்து ஒரே மூச்சில் முடித்து இன்றும் மறவா நினைவு...
அதனை தமிழில் படிக்கும் ஆர்வம் மற்றும் பிரெஞ்சினில் மட்டுமே வந்த arizona love எனும் கடைசி கதையினையும் ஒரு சேர ஒரே புத்தகமாக கையில் பிடிக்க புரட்ட படிக்க நான் இங்கு டான்ஸ் ஆடுகிறேன்...
நான் மாடஸ்டியின் பரம ரசிகன் Wild West இல் தெரிந்தது எல்லாம் டெக்ஸ் டெக்ஸ் டெக்ஸ் என்று இருந்த நிலையில் மடஸ்டி காமிக்ஸ் strips கு பிறகு மிக விறுவிறுப்பாக மிகவும் ரசிக்க தக்க ஒரு படைப்பு மொபியஸ் கைவண்ணத்தில் வந்த இந்த மின்னும் மரானம்,,,
வெளியீட்டு விழா :
ஒரு நம்ம வீட்டு fuction feel !!! விஜயன் சார் அவர்களுக்கு நன்றி...
எனது கல்யாண பத்திரிகையினை அழகாக டிசைன் செய்து அசத்திய மாயாவி சிவா அவர்களுக்கு நன்றிகள் பல...
அதனை கண்டு திகைத்த விஜயன் சார்...
நடுவில் ஒரு செல்பி !!!
என் அப்பா கிட்ட பேசிட்டு இருந்த ஒரு feel சௌந்தரபாண்டியன் சார் உடன் இருந்த பொது..
விழாக்கள் பல தொடர வேண்டி.... ஸ்ரீராம் - டெக்ஸ் பேன் !!!
For a more detailed history of Mike Blueberry - History