Saturday, 7 September 2013

Captain Prince Special!!! அமர்க்கலபடுத்தி உள்ளனர்!!



இன்றும் பசுமையாக நினைவிருகிறது எனது அன்னை எனக்கு படித்து காட்டிய திகில் காமிக்ஸ் நரகத்தின் எல்லையில், 



கேப்டன் பிரின்ஸ் கதைகள் எனக்கு மிகவும் பிடித்தவையாக பல காரணங்கள் உண்டு.

சன்ஷைன் லைப்ரரி எனும் பிரதேசத்தில் தலைவர் பின்னி எடுக்கிறார்... 

புரட்டி படிக்கச் உகந்த விதத்தில் எடை குறைவாக உலகத்தின் அருமையான படைப்புக்களை வரிசையாக வண்ணத்தில் மறுபதிப்பு என்னும் கனவினை இன்று நினைவாகியுளார்...


கிரேக் மற்றும் ஹெர்மன் ஆகிய உன்னத கலைஞர்களின் படைப்புக்களை மட்டுமல்லாது, அவர்களை பற்றியும் அவர்களது கூட்டணி பற்றியும், பற்றி எரியும் பாலைவனத்தில் ஒரு காமிக்ஸ்.காம் போட்டுள்ளது சூப்பர்...

கருப்பு வெள்ளையில் கண்ட பக்கங்களை முழு வண்ணத்தில் காணும் போது.. சொல்ல இயலா பேரின்பம்... Thanks to our beloved Edi -Vijayan Sir.



மறக்க முடியாத ஜின் இன்  சாகசமும்....




 
முதலைகளோடு ஒரு போராட்டமும்..



 ஹெர்மன் கை வண்ணமே தனித்துவமானது....

பற்றி அறியும் பாலைவனம் சில பக்கங்கள்...






நமது ஓவியரின் கைவண்ணமே அலாதி தான்....

பல நாட்களாக கண் முழித்து இந்த இதழினை எங்களுக்கு அளித்த விஜயன் சார் மற்றும் அவர் குழுவிற்கு கோடி நன்றிகள்...

பி.கு: எனது புத்தகம் பிரிண்ட் நன்றாக உள்ளது போலவே தெரிகிறது... என்னால் எதுவும் குறை காண இயலவில்லை... 100 ரூபாய் விலையில் இதற்கு மேல் என்ன மக்கள் எதிர்பார்கிறார்கள் என தான் புரியவில்லை....
இது எனது கருது மட்டுமே...