Saturday, 3 November 2012

தங்க கல்லறை! - The Lost Dutchman's Mine & The Ghost With The Golden Bullets






தமிழாக்கம் செய்யப்படும் ஆங்கில திரைப்படங்களை வெறுப்பவன் நான், 

ஆனால் இந்த அட்டகாசத்தை தமிழிலும் மிகவும் விரும்பினேன்.

நெடு நாட்களாக காத்திருந்து நினைத்தது கிடைத்தால் அதுவும் மிக நன்றாக கிடைத்தால் எப்படி இருக்கும்.

 புத்தகம் வந்தவுடன் ஒரு chips பாக்கெட்டை எடுத்துக்கொண்டு சொகுசாக சோபாவில் சரிந்தேன்,

நான் இது வரை தமிழில் வந்த தங்க கல்லறை படித்ததில்லை.

அதன் ஆங்கில புத்தகமான  The Lost Dutchman's Mine & The Ghost With The Golden Bullets  ஐ படித்திருக்கிறேன் - படிக்க ஆரம்பித்ததிலிருந்து முடிக்கும் வரை சீட்டின் நுனியில் அமர்ந்து ஒரு cowboy படம் பார்த்தது போன்ற பீல் அபோது என்னக்கு இறுந்தது.

தமிழில் நமது விஜயன் சார் மொழிபெயர்ப்பில் முழு வன்னத்தில் பிரமாதம். 




ஒரிஜினல் PH அப்டியே விட்டிருக்கலாம் ஆனாலும் கதையின் தாகத்தால் வேறு எந்த குறையும் சொல்ல இயலவில்லை.



அனால் ஒன்று காமிக்ஸ் டைம்க்கு ஒரு சங்குசக்கரம் போல போட்ட முத்து லோகோ அருமை அனால் அதனால் காமிக்ஸ் டைம் படிபதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.




எனது சிறுவயதில் பார்த்த மேட்டமொர்ப்ஹசிஸ் என்ற ஆங்கில படம் திரும்பவும் எனக்கு நினைவுக்கு வந்தது திகிலின் பிசாசு செடிகள் கதையினால்.

எல்லாவற்றையும் விட தங்களது 2013 trailer சூப்பர்!!!



மீண்டும் ப்ருனோ பிரேசில் மற்றும் ரோஜெரை காணபோகிறோம் என்பதில் மகிழ்ச்சி 





அட்வான்சாக அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துகள் !!!